RECENT UPDATE

6/recent/ticker-posts

Header Ads Widget

Photo of the Remarkables mountain range in Queenstown, New Zealand.

HOW TO TREAT OSTEOARTHRITIS TAMIL

 

முழங்கால் மூட்டுக்கள் தேயுமா???

 


நாம் சுமாராக தினமும் இரண்டு பாதங்களையும் உபயோகித்து ஆராயிரம் அடிகளை வைத்து பூமியில் பயணிக்கிறோம். சுமாராக 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் 11 லட்சம் கிலோமீட்டர் வாழ்க்கையில் நடப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். நாம் பயணிக்கும் இந்த தூரத்தை கடக்க முழங்கால் மூட்டு இன்றியமையாத பயணத்தை செய்து வருகிறது. அதாவது நம் இரண்டு கால்கள் மூட்டுக்களும் தொய்வில்லாமல் தொடர்ந்து நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மோடு பயணிக்கிறது. இப்படித் தொடர்ந்து பயணிக்கும் மூட்டுக்கள் சில நேரம் தேய்மானம் அடையும் பொழுது கடுமையான வலியையும் தொடர்ந்து பயணிக்கும் அதாவது நடப்பது சிரமம் ஆகலாம்.


தொடை எலும்பு கால் எலும்பும் இணையும் பகுதியை நாம் மூட்டு என்கிறோம் அதாவது ஆங்கிலத்தில் இரு எலும்புகள் இணையும் பகுதியை மூட்டு என்கிறார்கள் அதேபோல் கால் மூட்டுக்கள் முழங்கால் மூட்டு தொடை எலும்பு பிமர் மற்றும் கால் எலும்பு டிபியா எனப்படும் இரண்டு எலும்புகளும் முன் எலும்பு பட்டலா இந்த மூன்று எலும்புகளும் மூட்டுகளுக்கு வலு சேர்க்கின்றன.


மருத்துவர் உங்கள் கால் மூட்டு தேய்ந்து விட்டது எனக் கூறும் பொழுது மருத்துவரை நாம் ஆச்சரியமாக பார்ப்போம். கால் எலும்புகள் தேயுமா என்று ஆச்சரியமாக கேட்போம், அதாவது நாம் வாங்கும் சைக்கிள் காலம் செல்ல செல்ல பழுதுபட்டு சத்தம் கொடுப்பதுபோல அதை தடுப்பதற்கு நாம் உராய்வு எண்ணெய் விடுவது போல கால் மூட்டுக்களும் காலம் செல்ல செல்ல சேதமடைகிறது. அந்த சேதத்தை நாம் அதாவது மருத்துவர்கள் தேய்மானம் என்று சொல்கிறார்கள்.

 

உங்கள் மூட்டு சேதம் அடைந்து விட்டது என்பதை என்று ஒருவர் கூறினால் கண்டிப்பாக நாம் அவரை கோபப்பட்டு பார்ப்போம், கால் மூட்டுகளில் உள்ள  இரண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் உராய்வை கட்டுப்படுத்தும்  எண்ணெய் போன்ற திரவம் ஆங்கிலத்தில் சைனோவியல் என்பார்கள் காலப்போக்கில் இந்த திரவம் சுரக்கும் செல்களில் தொய்வு ஏற்படும்பொழுது திரவ சுரப்பை நிறுத்திக்கொள்ளும் இதனால் மூட்டுகளுக்கு இடையே உள்ள எலும்புகள் நேரடியாக உராய்வு ஏற்படுத்தும் பொழுது மூட்டு எலும்புகளுக்கு மேலே உள்ள குருத்தெலும்புகள் மெதுமெதுவாக தேய்ந்து போகிறது. குருத்தெலும்புகள் 3 எலும்புகளுக்கிடையே பஞ்சு போன்று அமைந்து மூட்டு எண்ணையும் சேர்ந்து உராய்வை கட்டுப்படுத்துகிறது. சில நேரங்களில் சிலருக்கு எண்ணையும் குருத்தெலும்பும் சேதாரம் அடையும் பொழுது அது முழங்கால் மூட்டு தேய்மானம் மற்றும் சத்தம் ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் இதனை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்பார்கள். அதாவது மூட்டு எலும்புகளுக்கிடையே தேய்மானம் ஏற்பட்டு உராய்வு அதிகரிக்கும் பொழுது மூட்டுகளுக்கு இடையே வெப்பம் உண்டாகிறது இதனால் மூட்டை சுற்றியுள்ள மெல்லிய செல்கள் சேதமடையும் பொழுது நடக்கும் பொழுது கடுமையான வலியை வெளிப்படுத்துகிறது.

 

மூட்டுத் தேய்மானம் உள்ளவர்களுக்கான என்னென்ன பிரச்சினைகள் இருக்கும்

1.
மூட்டு சுற்றியுள்ள பகுதிகளில் வலி சில நேரங்களில் அதிக வீக்கம்
2.
மூட்டுக்களில் அசைவுகள் ஏற்படும்பொழுது உள்ளே இருந்து வரும் சத்தம்
3.
சில நேரங்களில் மூட்டு சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி எரிச்சல்
4.
கால்களை மடக்கி கோயில்கள் போன்ற பொது இடங்களில் கீழே அமரவதில்சிரமம்
5.
படியேறுதல் மற்றும் இறங்குவதில் கடுமையான சிரமம்
6.
கால்களை மடக்குவது நீட்டுவது செயல்களின் போது கடுமையான வலி




இதற்கு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்ன செய்வதால் தேய்மானம் அதிகமாவதைத் தடுக்கலாம் தேய்மானம் ஆனதை மீண்டும் புதுப்பிக்க முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கூறமுயற்சிக்கிறேன்.

வளர்ந்துவரும் நாடுகளிலும் வளர்ந்த நாடுகளில் உள்ள சுமாராக 60 வயதிற்கு மேற்பட்ட இருபாலரையும் பாதிக்கிறது இந்த மூட்டு தேய்மானம், இருப்பினும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிக உபாதைகளை கொடுக்கிறது. பெண்களுக்கு பொதுவாக ஆஸ்டியோபொரோசிஸ் அதாவது எலும்பு பலவீனமாகும் பாதிப்பு பெரும்பாலான போதையில் இருப்பதால் இந்த மூட்டு தேய்மானம் பெண்களை அதிகமாக தாக்கலாம். அதற்கு உடம்பில் கால்சியம் சத்தின் அளவு போதுமான அளவு இருப்பது அவசியம். கால்சியம் சத்து உடம்பில் உள்ள எலும்புகள் நீண்டகாலம் வலுவாகவும் உராய்வில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்  கண்டிப்பான தேவையாக இருக்கிறது. பிசியோதெரபி மருத்துவராக உங்களுக்கு கூறும் அறிவுரைகள்

1.
நன்றான உணவு பழக்க முறைகள்


2. கால்சியம் சத்துக்கள் போதுமான அளவு நிறைந்த காய்கறிகள் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுதல்


3.
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த எலும்புத் தேய்மானம் அதிகமாக வருவதால் உடல் எடை எப்பொழுதுமே சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்


4.
மூட்டுகளுக்கு அதிக பளுவைத் தராத பயிற்சிகள் ஆன நடைப்பயிற்சி சைக்கிள் ஓட்டுதல் நீச்சல் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வரலாம்


5.
வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் நெடுந்தூரம் சிறு உடற்பயிற்சி உணவில் கட்டுப்பாடு தேக ஆரோக்கியத்தை பேணுதல் போன்றவற்றை தொடர்வதால் ஒரு காலத்தில் வரும் இந்த மூட்டுத் தேய்மானத்தை தடுக்கலாம்


6.
உங்கள் முன் தொடை சதை வலுவாக வைத்துக் கொள்ளும் நடைபயிற்சியை தினமும் இருபது நிமிடமாவது செய்துவாருங்கள்


7.
கடுமையான வலி உங்களை தாக்கும் பொழுது ஐஸ் ஒத்தடம் அல்லது சுடுநீர் ஒத்தடம் வலியை சுற்றியுள்ள பகுதிகளில் கொடுக்கும் பொழுது வலியை வெகுவாக குறைக்கலாம்


8.
நீங்கள் செய்யும் நடைப்பயிற்சியை தகுந்த காலணிகள் அணிந்து செய்வது உங்கள் கால் எலும்புகளுக்கு இடையே ஏற்படும் அதிர்வுகளை (உராய்வை) கட்டுப்படுத்தும்


9. மூட்டு தேய்மானம் உள்ளவர்கள் மிருதுவான இலகுவான ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை வாங்கி அணியலாம்


10.
தொடர் பயிற்சிகள் மேலே குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து நாம்தப்பலாம்.


 செந்தில்குமார் தியாகராஜன்

எக்ஸ்ல் பிசியோதெரபி மருத்துவ கல்லூரி

பிசியோதெரபி மருத்துவர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்